தினமும் கோக், ஸ்பிரைட் குடிக்கும் 101 வயது தாத்தா! நீண்ட ஆயுள் ரகசியம் என்ன?
சீனாவில் 101 வயதிலும் சுறுசுறுப்பாக வாழும் லு ஷிஜெங் என்ற முதியவர், தனது வித்தியாசமான உணவுப் பழக்கங்களால் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளார். பொதுவாக உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு சர்க்கரை அதிகமுள்ள குளிர்பானங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படும் நிலையில், இவர் கோகோ கோலா, ஸ்பிரைட் போன்ற பானங்களை விரும்பிக் குடிப்பதுடன், கடல் உணவுகளையும் விரும்பி சாப்பிடுகிறார்.
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் வசிக்கும் லு ஷிஜெங், ஐந்து நாட்களுக்கு ஒருமுறை ரிக்ஷாவில் உள்ளூர் சந்தைக்குச் சென்று மீன், இறால், நண்டு, பன்றி இறைச்சி, காய்கறிகள் உள்ளிட்டவற்றை வாங்குவதாகக் கூறப்படுகிறது. அவரைப் பராமரிக்கும் பெண்ணின் தகவல்படி, ஒரு வேளையில் அரை கிண்ணம் சாதத்துடன் ஒரு தட்டு முழுவதும் நண்டையும் சாப்பிடுவாராம். குளிர்ந்த ஸ்பிரைட்டில் சிறிதளவு ஒயின் கலந்து குடிப்பதும் அவருக்குப் பிடித்தமான பழக்கம்.
லு ஷிஜெங் தினமும் மாலை 5 மணிக்குள் இரவு உணவை முடித்துவிட்டு, இரவு 8 மணியளவில் தூங்கச் செல்கிறார். அதிகாலை 4 மணிக்கு விழித்தாலும், படுக்கையிலேயே ஓய்வெடுத்து உடலை நீட்டி மடக்கிப் பயிற்சி செய்த பின்னர் காலை 6 மணிக்கு எழுகிறார். நண்பகலில் சிறிது நேரம் தூங்குவதும் அவரது அன்றாட வழக்கத்தில் இடம்பெறுகிறது. இருப்பினும், கோக், ஸ்பிரைட் குடிப்பதுதான் நீண்ட ஆயுளுக்குக் காரணம் என்று இதன் மூலம் முடிவெடுக்க முடியாது
