AI வளர்ச்சியால் வேலை இழப்பா? ஊழியர்களைக் காக்க சீனாவின் 18 அம்சத் திட்டம்!

 
ஏஐ

 

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதனால் ஏற்படக்கூடிய வேலை இழப்புகளைக் கட்டுப்படுத்த சீனா 18 அம்ச வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், ஏற்கெனவே பணியில் இருப்பவர்களின் வேலைவாய்ப்பையும் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.

China's 18-Point AI Jobs Plan Urges Buffer Periods

சீன அரசின் மாநில கவுன்சில் பொது அலுவலகம் வெளியிட்டுள்ள இந்த வழிகாட்டுதல்கள், ஆறு முக்கியப் பிரிவுகளின் கீழ் 18 நடவடிக்கைகளை முன்வைக்கின்றன. AI திட்டங்களைப் பெரிய அளவில் செயல்படுத்தும்போது வேலைவாய்ப்பில் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே மதிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

AI பயன்பாட்டால் வேலை பாதிக்கப்படக்கூடிய ஊழியர்களுக்கு நிறுவனங்கள் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, மறுபயிற்சி, வேறு பணிக்கு மாறுதல் மற்றும் புதிய வேலை தேடுவதற்கான உதவிகளை வழங்கும் வகையில் ‘வேலையின்மை இடைக்கால பாதுகாப்பு காலம்’ ஒன்றை உருவாக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

China Issues 18-Point Plan to Protect Workers From AI Job Losses - Caixin Global

மேலும், ஆட்கள் பற்றாக்குறை உள்ள மற்றும் ஆபத்தான பணிகளில் AI பயன்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கவும், அதிக தொழிலாளர்கள் தேவைப்படும் துறைகளில் அதன் பயன்பாட்டை கவனத்துடன் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊழியர்களின் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு வழிகாட்டுதல், சமூகப் பாதுகாப்பு, ஊதியம் மற்றும் பணியிட உரிமைகள் ஆகியவற்றுக்கும் இந்தத் திட்டம் முக்கியத்துவம் அளிக்கிறது. AI வளர்ச்சியால் உருவாகும் வேலைவாய்ப்பு மாற்றங்களைக் கண்காணித்து முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது.