சீனாவில் 12-வது மாடி ஜன்னலில் தொங்கிய 3 வயது சிறுமி மீட்பு... வைரல் வீடியோ!

 
சீனா

 

சீனாவின் புஜியான் மாகாணம், ஜாங்பிங் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடி ஜன்னலில் சிக்கி, வெளியே தொங்கிய 3 வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்.

அக்டோபர் 17-ம் தேதி காலை, ஜன்னலின் பாதுகாப்புக் கம்பிகளுக்கு இடையே சிறுமியின் தலை சிக்கியது. இதனால் அவரது உடல் கட்டடத்துக்கு வெளியே தொங்கியது. இதைக் கண்ட அண்டை வீட்டினர் மற்றும் பாதுகாவலர்கள், கீழ்தள ஜன்னலில் இருந்து ஒரு ஸ்டூலை நீட்டித்து சிறுமியின் உடலுக்குத் தாங்குதலாகப் பிடித்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், வீட்டின் கதவைத் திறந்து சிறுமியை மீட்டனர். பின்னர் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு காயம் ஏற்படவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.சம்பவத்தின்போது சிறுமியின் தாயார் பொருட்கள் வாங்க வெளியே சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மீட்பு சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.