பெயரே காதலை இணைத்ததா? ஒரே பெயர் கொண்ட தம்பதி… வைரலாகும் வியப்பான கதை!

 
காதல்

 

சீனாவில் ஒரே பெயரைக் கொண்ட ஆணும், பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.கிழக்கு சீனாவின் செஜியாங் மாகாணத்தில் உள்ள யிவு நகரைச் சேர்ந்த 33 வயது மணமகன், 28 வயது மணமகள் இருவரின் பெயரும் ‘ஜூ சியாசோங்’. இருவரும் விமானப் போக்குவரத்துத் துறையில் பணிபுரிகின்றனர். மனைவி விமானப் பணிப்பெண்ணாகவும், கணவர் பாதுகாப்பு அதிகாரியாகவும் உள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு வேலைவாய்ப்பு முகாமில் நேர்காணலின்போது ஒரே பெயர் அழைக்கப்பட்டதும் இருவரும் ஒரே நேரத்தில் எழுந்து நின்றனர். அப்போது தொடங்கிய அறிமுகம், 2019-ல் காதலாக மாறியது. இந்த ஆண்டு மே மாதம் திருமணத்தைப் பதிவு செய்த அவர்கள், அக்டோபர் 6-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

திருமண அழைப்பிதழ் மற்றும் ஆவணங்களில் ஒரே பெயர் காரணமாக ஏற்பட்ட குழப்பங்களும் இந்தக் கதையை மேலும் சுவாரசியமாக்கியுள்ளன. இந்த அரிய தற்செயல் நிகழ்வை இணையவாசிகள் ‘விதியின் விளையாட்டு’ எனக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.