பேரிடர் மீட்புப் பணிகளில் களமிறங்கும் மனித உருவ ரோபோக்கள்... வைரல் வீடியோ!

 
ரோபோ

 

சீன தலைநகர் பெய்ஜிங்கில் மனித உருவ ரோபோக்களின் திறனைச் சோதிக்கும் சிறப்பு ஒத்திகைப் போட்டிகள் நடைபெற்றன. யிஸ்சுவாங் தொழில்நுட்ப மையத்தில் நடைபெற்ற இந்தச் சோதனையில், அவசரகால பேரிடர் மீட்பு, ஆபத்தான தொழிற்சாலைகளில் ஆய்வு மற்றும் பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுத்தும் நோக்கில் ரோபோக்கள் பரிசோதிக்கப்பட்டன.

14 வகையான கடினமான சவால்கள்

இந்த ஒத்திகையில் பங்கேற்ற அதிநவீன ரோபோக்கள், சிதைந்த தடைகள், தீக்காயம் ஏற்பட்ட பகுதிகளை ஒத்த சூழல்கள் மற்றும் சீரற்ற பாதைகள் உள்ளிட்ட 14 வகையான சவால்களை எதிர்கொண்டன. அவற்றைக் கடந்து ரோபோக்கள் தங்களது செயல்திறனை வெளிப்படுத்தின. ஆபத்தான சூழல்களில் மனிதர்களின் நேரடி ஈடுபாட்டைக் குறைக்கவும், மீட்புப் பணிகளை மேம்படுத்தவும் இத்தகைய தொழில்நுட்பங்கள் உதவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.