கையில் இருந்த கம்பியால் விபரீதம்... அடுத்த நொடியே தீப்பற்றி எரிந்த நபர்...நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!
சீனாவில் நீண்ட கம்பியை எடுத்துச் சென்ற நபர், எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின் கம்பியில் அதை உரசியதால் உடலில் தீப்பற்றி படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள கைஃபெங் நகரில் கடந்த நவம்பர் 3-ம் தேதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
开封一男子持长竿触碰高压线瞬间!目击者:“听到三声巨响”。https://t.co/EWqKdPSNHj https://t.co/WQqjdNqcQ9
— 希望之聲 - 中國時局 (@SoundOfHope_SOH) November 5, 2026
அங்குள்ள சாலையில் ஒருவர் நீண்ட கம்பி அல்லது குழாய் போன்ற பொருளை எடுத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்தப் பொருள் மேலே சென்றுகொண்டிருந்த உயர் அழுத்த மின் கம்பியில் உரசியுள்ளது. இதனால் அடுத்த சில நொடிகளில் அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியதுடன், அவரது ஆடைகளிலும் தீப்பற்றியது.
உடலில் தீப்பற்றி எரிந்ததால் வலியால் அலறிய அவரைக் கண்ட அருகிலிருந்த கடைக்காரர்கள் உடனடியாக தீயணைப்பான் கருவிகளுடன் ஓடிவந்தனர். பின்னர் அவரது உடலில் பற்றிய தீயை அணைத்து, ஆம்புலன்ஸ் வரும்வரை முதலுதவி அளித்தனர்.இதையடுத்து பலத்த தீக்காயங்களுடன் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பாதிக்கப்பட்டவரின் அடையாளம் மற்றும் தற்போதைய உடல்நிலை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
