தண்ணீரில் 40.74 கி.மீ. பைக் பயணம்! சீன இளைஞர் கின்னஸ் உலக சாதனை... வைரல் வீடியோ!

 
பைக்

 

சாலையில் மட்டுமல்ல, தண்ணீரின் மீதும் மோட்டார் சைக்கிளை ஓட்டி சாதனை படைத்துள்ளார் சீனாவைச் சேர்ந்த ஜாங் சூ. அந்நாட்டின் ஹுனான் மாகாணத்தில் அக்டோபர் 25-ம் தேதி நடைபெற்ற இந்த முயற்சியில், அவர் 40.74 கிலோமீட்டர் தூரம் நீரின் மீது பைக்கை இயக்கி கின்னஸ் உலக சாதனையைப் படைத்தார்.

சீன மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ZXMOTO-வின் நிறுவனர் ஜாங் சூ (39), இதற்காக பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்ட MX450 ரக மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தினார். மியான்க் மியாவ் தன்னாட்சிப் பகுதியில் உள்ள ஆற்றில் அமைக்கப்பட்ட பாதையில் ஆறு சுற்றுகள் பயணித்து இலக்கை எட்டினார்.

இந்தச் சாதனை, மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் மூலம் திறந்த நீர்ப்பரப்பில் அதிக தூரம் பயணித்ததற்கான கின்னஸ் சாதனையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 31.8 கிலோமீட்டர் தூரம் பயணித்ததே சாதனையாக இருந்தது.

பைக்கை நீரில் மிதக்கச் செய்வதற்கான மிதவை அமைப்புகள், நீர் புகாத பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்த முயற்சிக்காக ஜாங் சூவின் குழுவினர் ஐந்து மாதங்கள் தயாராகியுள்ளனர். 17 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அவரது முயற்சி தற்போது உலக சாதனையாக மாறியுள்ளது.