ரோபோக்கள் உலக விளையாட்டுப் போட்டி... 100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட் சாதனை முறியடிப்பு!
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் மனித வடிவ ரோபோக்களுக்கான 2-வது உலக விளையாட்டுப் போட்டி நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. தடகளம், கால்பந்து மற்றும் டேபிள் டென்னிஸ் உள்பட பல்வேறு வகையான 51 போட்டிகள் இதில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த உலகளாவிய போட்டியில் 16 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 2,056 மனித வடிவ ரோபோக்கள் பங்கேற்றுத் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றன.
இப்போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சீன ரோபோக்கள் வியக்கத்தக்க வகையில் புதிய சாதனை படைத்துள்ளன. உலகப் புகழ்பெற்ற தடகள வீராரான உசேன் போல்ட் கடந்த 2009-ம் ஆண்டு பெர்லினில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 9.58 வினாடிகளில் கடந்து சாதனை படைத்திருந்தார். இந்தச் சாதனையைச் சீனாவைச் சேர்ந்த ரோபோக்கள் தற்போது முறியடித்துத் தங்களது வேகத்தை நிரூபித்துள்ளன.
மனிதர்களைப் போலவே துல்லியமாகவும் வேகமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நவீன ரோபோக்களின் சாதனை விளையாட்டு உலகத்தினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத் தொழில்நுட்ப வளர்ச்சி எத்தகைய மாற்றங்களை உருவாக்கு என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ள இந்தப் போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.
