அதிர்ச்சி... சூதாட்ட செயலி மூலம் இந்தியர்களிடம் ரூ1400கோடி சுருட்டிய சீனா!!

 
ஆன்லைன் கேம்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இளைஞர்கள் பலர் அடிமையாகி அதிலிருந்து மீளமுடியாமல் பணத்தை தொலைத்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமானோர் கோடிக்கணக்கான ரூபாயை இழந்து வருகின்றனர்.  இந்நிலையில், சீனாவில் வசித்து வரும்   ஒருவர், 1,200 இந்தியர்களிடம் கால்பந்தாட்ட சூதாட்ட செயலி மூலம் ரூ  1,400 கோடி  சுருட்டிதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன்

 இதுகுறித்த சிறப்பு விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழுவை குஜராத் காவல்துறை அமைத்தது.  அதில் சீனாவின் ஷென்சென் பகுதியில் வசித்து வரும்   வூ உயன்பே என்பவர் இந்தியாவைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதன் மூலம் 15 வயது முதல் 75 வயது வரை உள்ளவர்களை குறி வைத்து   தினமும் ரூ.200 கோடி டார்கெட் பிக்ஸ் செய்து  இந்த செயலி மூலம் பணத்தை  சுருட்டியுள்ளனர்.இந்த செயலி திடீரென வேலை செய்யாததை அடுத்து தங்கள் பணம் மோசடி செய்யப்பட்டதை மக்கள் உணர்ந்தனர். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

ஆன்லைன் வகுப்புக்களுக்கு கிடுக்கிப் பிடி! பள்ளிக் கல்வித்துறை!

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறை அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து குஜராத் போலீஸார்  " சீனாவின் ஷென்சென் பகுதியில் வசித்து வரும்  வூ உயன்பே  கடந்த 2020 முதல் 2022வரை இந்தியாவிற்குப் பயணம் செய்துள்ளார். அப்போது மக்கள் பலர் செல்வச் செழிப்புடன் இருப்பதைப் பார்த்து இந்தியர்கள் சிலருடன் சேர்ந்து சூதாட்ட செயலி ஒன்றைத் தொடங்கியதாக கூறியுள்ளார்.   இந்த செயலியை உருவாக்கி 9 நாட்களுக்குள் 1,200 பேரிடம் சுமார் ரூ.1,400 கோடி மோசடி செய்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.  சூதாட்ட செயலி மூலம் இந்தியர்களிடமிருந்து ரூ1,400 கோடி  சீனாவைச் சேர்ந்தவர் சுருட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web