சீனாவில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி சரக்கு கப்பல் சேவை தொடக்கம்!

 
kappal

சீனாவில் இருந்து தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு நேரடி சரக்கு கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தென் தமிழகத்தின் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்துக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tuticorin Transportation From China FCL Sea Price Company - High-Quality - SDI Logistics

ரீஜினல் கண்டெய்னர் லைன் நிறுவனம் இயக்கும் இந்தச் சேவையின் கீழ், எம்.வி. நவதா பூம் என்ற சரக்கு பெட்டகக் கப்பல் முதன்முறையாக தூத்துக்குடி துறைமுகத்தை வந்தடைந்தது. 147.82 மீட்டர் நீளமும், 23.38 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல், சுமார் 1,100 சரக்கு பெட்டகங்களைக் கையாளும் திறன் கொண்டது.

சீனாவிலிருந்து இந்தியாவிற்கு கடல் சரக்கு: செலவு, ஆவணங்கள் மற்றும் போக்குவரத்து நேரம் - சரக்கு மக்கள் வலைப்பதிவுகள்

சீனாவின் கின்ஷோ துறைமுகத்தில் இருந்து புறப்படும் கப்பல், வியட்நாமின் ஹைபோங் வழியாக தூத்துக்குடியை வந்தடைகிறது. கின்ஷோவில் இருந்து தூத்துக்குடிக்கு வர 13 நாட்களும், ஹைபோங்கிலிருந்து வர 12 நாட்களும் ஆகின்றன. தற்போது இரு வாரங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும் இந்தச் சேவை, வர்த்தகத் தேவையைப் பொறுத்து வாராந்திர சேவையாக அதிகரிக்கப்படலாம். இதனால் சூரிய மின்தகடு, மின்சார வாகன உற்பத்தி உள்ளிட்ட தொழில்களுக்கு கூடுதல் வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.