சீன காதலர் தினம்: 2000 ட்ரோன்கள் வானில் பறக்கவிட்டு பிரம்மாண்ட சாகசம்!

 

 

சீனாவில் காதல் திருநாளான கிக்சி (Qixi) பண்டிகையைக் கொண்டாடும் வகையில், ஹங்காங் நகரில் உள்ள துறைமுகப் பகுதியில் 2,000 ட்ரோன்களை வானில் பறக்கவிட்டு பிரம்மாண்ட ஒளிக்காட்சி சாகசம் நடத்தப்பட்டுள்ளது. கணினி கட்டுப்பாட்டு அமைப்புகள் மூலம் ஒத்திசைக்கப்பட்ட இந்த 2,000 ட்ரோன்களும் வான்வெளியில் பல்வேறு முப்பரிமாண வடிவங்களை உருவாக்கி அசத்தின.

பாரம்பரிய சீன உடையில் காதலர்கள் கைகோர்த்து நிற்கும் அனிமேஷன் காட்சிகள் மற்றும் பிரிந்திருக்கும் காதலர்கள் ஒன்று சேர்வதைக் குறிக்கும் 'மக்பை' பறவை பாலம் ஆகியவை வான்வெளியில் ஒளிரச் செய்யப்பட்டன. மேலும், வண்ணமயமான விளக்குகள் மூலம் பிரம்மாண்ட ரோஜா மலர்களும் இதய வடிவங்களும் உருவாக்கப்பட்டு அப்பகுதியே காதல் மயமாக்கப்பட்டது.

Love crosses oceans, and so do we. Today, on Qixi Festival (Chinese Valentine's Day), the Chinese night sky tells a story—thousands of drones form patterns representing ”Magpie Bridge,“ ”lovers reunited,“ and ”lifelong

அதிவேகக் காற்று போன்ற சவால்களையும் தாண்டி, ட்ரோன்கள் ஒன்றோடொன்று மோதாமல் துல்லியமாக இயக்கப்பட்ட இந்த நிகழ்வு சீனாவின் தொழில்நுட்ப வலிமையைப் பறைசாற்றும் விதமாக அமைந்தது. துறைமுகக் கரையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் சுற்றுலாப் பயணிகளும் இந்த கண்கொள்ளாக் காட்சியை கண்டு களித்தனர்.