தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு கிடையாது!! ஓபிஎஸ் எதிர்ப்பு!!

 
தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு கிடையாது!! ஓபிஎஸ் எதிர்ப்பு!!

பொங்கல் பரிசு தொகுப்பு பைகளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டு இருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுகவின் ஓ.பன்னீர் செல்வம், சித்திரை முதல்நாள் தான் தமிழ் புத்தாண்டாக தொடர வேண்டும் என கூறியுள்ளார்

தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு கிடையாது!! ஓபிஎஸ் எதிர்ப்பு!!

தமிழக அரசின் 2022 ஆம் ஆண்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்பு பைகளில் “இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஓ. பன்னீர் செல்வம் தமிழக மக்களின் நம்பிக்கையை சிதைக்கக் கூடாது என கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மக்களின் எண்ணத்திற்கு முற்றிலும் மாறான வகையில் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு பைகளில் ‘தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்’ என அச்சடிக்கப்பட்டிருக்கிறது. இது தமிழக மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் விதத்தில் உள்ளது. தமிழ்நாட்டிலே பல நூற்றாண்டுக் காலமாக சித்திரை மாதப் பிறப்பு தான் தமிழ்ப் புத்தாண்டு தினமாக தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது காலம் காலமாக கடைபிடிக்கப்படுகின்ற மரபு.

தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு கிடையாது!! ஓபிஎஸ் எதிர்ப்பு!!

மக்களின் இந்த உணர்வுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், ‘தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு’ என முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில், 2008 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டு மக்கள் மீது திணிக்கப்பட்டது. அந்த சட்டம் அடுத்து அமைந்த மக்கள் நல அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டது. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் மக்களின் உணர்ச்சிகளுக்கு, கருத்துகளுக்கு மதிப்பளித்து, சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற நடைமுறை மரபு தொடர்ந்திட, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று அதில் தெரிவித்துள்ளார்.

From around the web