மதுக்கடை முன்பு தலைகீழாகப் படுத்துத் தூங்கிய போலீஸ்காரர்... வைரல் வீடியோ!

 
kuratai

 

உத்தரப் பிரதேச மாநிலம் சித்ரகூட்டில், மதுக்கடை முன்பு தலைகீழாகப் படுத்துக் குறட்டை விட்டுத் தூங்கிய போலீஸ் கான்ஸ்டபிளின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பணியில் இருந்த அவர், அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் தன்னிலை மறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது.

வீடியோவால் நடவடிக்கை

காவலர் தரையில் படுத்துத் தூங்கும் காட்சிகள் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி, சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகவில்லை.