திரைத்துறையில் பரபரப்பு: செப். 1 முதல் படப்பிடிப்பு மற்றும் புதிய படங்கள் வெளியீடு நிறுத்தம்!

 
தமிழ்நாடு

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திரைப்படப் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுமையாக நிறுத்தப்படும் எனத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன. மேலும் இந்தக் காலக்கட்டத்தில் புதிய படங்கள் எதுவும் திரையரங்குகளில் வெளியாகாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களின் இந்த அதிரடியான அறிவிப்பு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏவிஎம்

திரையரங்குகளில் ரிலீஸாகும் படங்கள் குறைந்தது 8 வாரங்கள் கழித்துத்தான் ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்ற திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கங்களின் இந்த திடீர் போராட்ட அறிவிப்பு திரையுலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாகத் தற்காலிகமாகப் படப்பிடிப்புகள் அனைத்தும் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. திரையுலகில் நிலவும் இந்தச் சிக்கல் குறித்துத் தொடர்புடைய சங்கங்கள் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது