'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' அச்சுறுத்தலால் தலைமை நீதிபதியின் நிகழ்ச்சி ஒத்திவைப்பு - மும்பையில் பரபரப்பு!
மும்பையில் நடைபெறவிருந்த பிரபல டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா, மாணவர் அமைப்பின் எதிர்ப்பு அச்சுறுத்தல் காரணமாகத் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மும்பை டாடா கல்வி நிறுவனத்தில் நடைபெறவிருந்த பட்டமளிப்பு விழாவில், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்ற இருந்தார். இந்நிலையில், அப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' என்ற அமைப்பின் பெயரில் விழா மேடையில் தலைமை நீதிபதிக்கு எதிராக எதிர்ப்புக் குரல் எழுப்பவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
மாணவர் அமைப்பினரின் இந்த அச்சுறுத்தல் தகவலைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பட்டமளிப்பு விழாவைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாகக் கல்வி நிறுவன நிர்வாகம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
