நாடு முழுவதும் நாளை மெழுகுவர்த்தி ஏந்திப் பேரணி - CJP அறிவிப்பு!

 
நீட்

நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், அறவழியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல் துறை தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நாடு தழுவிய மெழுகுவர்த்திப் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசுடன் டெல்லியில் 3-வது கட்டப் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலிலேயே, இப்போராட்ட அறிவிப்பை CJP வெளியிட்டுள்ளது:

நாளை ஜூலை 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாகவும் இந்த மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீசார் தடியடி

நீட் விவகாரத்தில் நியாயம் கேட்டுப் போராடிய மாணவர்கள் மீது காவல் துறையினர் நடத்திய அடக்குமுறையைக் கண்டிப்பதே இந்தப் பேரணியின் முக்கிய நோக்கம் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற முக்கியக் கோரிக்கையை முன்வைத்து CJP தொடர்ந்து போராடி வருகிறது.

டெல்லி நீட் கரப்பான்பூச்சி

ஒருபுறம் டெல்லியில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும், கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறும் வரை போராட்டத் தீவிரத்தைக் குறைப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளது. நாளை மாலை நடைபெறவுள்ள இந்த நாடு தழுவிய பேரணி, நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கும் எனக் கருதப்படுகிறது.