CJP கட்சித் தலைவர் அபிஜித் திப்கே பாட்டி காலமானார்.. டெல்லி போலீசார் கைது செய்துள்ள நிலையில் துயரம்!

 
CJP அபிஜித் திப்கே கரப்பான்பூச்சி கரப்பான்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' தலைவர் அபிஜித் திப்கே விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பாட்டி சாவித்திரிபாய் திப்கே வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

வாக்காளர் பட்டியல் முறைகேடுகளைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற இருந்த போராட்டத்தில் கலந்துகொள்ள மும்பையிலிருந்து விமானம் மூலம் டெல்லி வந்த அபிஜித் திப்கேவை, விமானத்திற்குள்ளேயே வைத்து டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். அவர் காவலில் வைக்கப்பட்டுள்ள சில மணி நேரங்களிலேயே அவரது பாட்டி சாவித்திரிபாய் திப்கே (85) மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டம் சந்துரு பிம்ப்ரி கிராமத்தில் காலமானார்.

தலைமை தேர்தல் ஆணையர் CJP

டெல்லி போராட்டம் மற்றும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள அபிஜித் திப்கேவின் பெற்றோரான பகவான் திப்கே மற்றும் அனிதா ஆகியோரின் வீட்டைச் சுற்றிலும் 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லி நீட் கரப்பான்பூச்சி

பாட்டியின் மறைவுச் செய்தி அறிந்த பெற்றோர் உடனடியாகத் சொந்த ஊருக்குக் கிளம்பத் தயாராகி வருகின்றனர். இதனிடையே, போலீஸ் காவலில் இருக்கும் அபிஜித் திப்கேவுக்கு இந்தத் துயரச் செய்தி அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டு, அவர் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்கப்படுவாரா என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.