டெல்லியில் நாளை சி.ஜே.பி. போராட்டம் - பாதுகாப்பு கருதி 57 மெட்ரோ நிலையங்களை மூட திட்டம்!

 
டெல்லி சிஜேபி போராட்டம்  மெட்ரோ

தலைநகர் டெல்லியில் நாளை நடைபெறவுள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் காரணமாக, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள 57 மெட்ரோ நிலையங்களை மூடக் கோரி டெல்லி காவல்துறை பரிந்துரைத்துள்ளது.

எஸ்.ஐ.ஆர்.-க்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை CJP கட்சியினர் போராட்டம் நடத்தவுள்ளனர்.

டெல்லி தடியடி

பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று இரவு 9 மணி முதல் நிலைமை சீராகும் வரை 57 மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை மூடுவதுடன், ரயில் சேவையின் இடைவெளியைக் குறைக்கவும்/அதிகரிக்கவும் டெல்லி காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

ராஜீவ் சவுக், சென்ட்ரல் செக்ரடேரியட், புதுடெல்லி, படேல் சவுக், ஜன்பத், மண்டி ஹவுஸ், ஐ.டி.ஓ., கரோல் பாக், லஜ்பத் நகர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளை உள்ளடக்கிய 57 நிலையங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

மெட்ரோ

மத்திய, வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு டெல்லி பகுதிகளைச் சேர்ந்த இந்த நிலையங்கள் குறித்த இறுதி முடிவை டெல்லி மெட்ரோ நிர்வாகம் எடுக்க உள்ளதால், பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.