டெல்லி போலீசுக்கு எதிரான சிஜேபி அமைப்பின் மனு தள்ளுபடி!

 
டெல்லி

டெல்லியில் நடைபெறவிருந்த போராட்டத்தில் பங்கேற்கவிடாமல் தங்களைப் பாதுகாப்புக் காவலில் சிறைபிடித்த காவல்துறையினர் மீது எப்ஐஆர் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.

டெல்லியில் திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றபோது தன்னைச் சட்டவிரோதமாகக் கைது செய்து சிறைபிடித்ததாகக் கூறி, CJP (கரப்பான்பூச்சி ஜனதா கட்சி) அமைப்பின் சட்டப் பிரிவுத் தலைவர் ரத்னா சிங் டெல்லி நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

டெல்லி தடியடி

கோரிக்கை: போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுத்து நிறுத்தியதுடன், தங்களைச் சுதந்திரமாக நடமாடவிடாமல் தடுத்த சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

டெல்லி

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அதற்கான முகாந்திரம் இல்லை எனக் கூறி அதனை அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. CJP அமைப்பினரின் தொடர் போராட்டங்கள் மற்றும் கைது நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்த நீதிமன்றத் தீர்ப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.