வெவ்வேறு பிரிவினரிடையே வெடித்த மோதல்... 49 பேர் பரிதாப பலி!

 
மோதல்

 
 
பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் உப்பர் குர்ரம் மாவட்டத்தில் இரு பழங்குடியின குழுக்களுக்கு இடையே நில உரிமை தொடர்பாக நீண்டகாலமாக பிரச்சினை நீடித்து வருகிறது. இஸ்லாமிய மதத்தின் ஷியா மற்றும் சன்னி பிரிவுகளை சேர்ந்த பொஷிரா மற்றும் மலிகல் ஆகிய இருபழங்குடியின குழுக்கள் இடையேயான இந்த நிலப்பிரச்சினை கடந்த சில நாட்களுக்குமுன் மீண்டும் தீவிரமடைந்தது. 

பாகிஸ்தான்


இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களுடன் ஒருவர் மீது ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த கலவரம் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது. இரு தரப்பினருக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  

பாகிஸ்தான் போலிஸ்

இந்நிலையில், இரு பழங்குடியின குழுக்களுக்கு இடையேயான மோதலில் இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 200 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதேவேளை, பழங்குடியின சபை மூலம் இரு குழுக்களுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சி வெற்றிபெற்றுள்ளது. 
 இரு குழுக்களும் சண்டையை கைவிட்டு சமாதானமாக செல்ல ஒப்புக்கொண்டுள்ளன. இதனால் உப்பர் குர்ரம் மாவட்டத்தில் விரைவில் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web