சூடான் - தெற்கு சூடான் எல்லையில் மோதல்; 26 பேர் பலி!
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடான் மற்றும் தெற்கு சூடான் எல்லையில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் ஏற்பட்ட மோதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
சூடானில் இருந்து பிரிந்து கடந்த 2011-ஆம் ஆண்டு தனி நாடாக உருவான தெற்கு சூடானுக்கும், சூடானுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாட்டு எல்லையில் உள்ள அபேயி நகரை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடுவதால், இந்நகரம் தற்போது ஐ.நா. சபையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.

அபேயி நகரில் உள்ள சந்தைப் பகுதியில் நகோக் டிங்கா மற்றும் மிசிரியா ஆகிய இரு பிரிவினர் இடையே நேற்று திடீரென கடுமையான மோதல் வெடித்தது.
தரப்பினர் இடையே ஏற்பட்ட இந்த மோதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இச்சம்பவத்தில் 82 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திடீர் மோதல்களால் அப்பகுதியில் தற்போது மிகுந்த பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
