இரு சமூகத்தினரிடையே வெடித்த கலவரம்.. மூடப்பட்ட கோவில் 9 மாதங்களுக்குப் பிறகு இன்று திறப்பு!

 
தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில்

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே மேல்பாதி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் தொடர்பாக கடந்த ஆண்டு இரு சமுதாய மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதனால் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டதால், கடந்த ஜூன் 7ம் தேதி வருவாய் துறை அதிகாரிகள் கோவிலை பூட்டி சீல் வைத்தனர்.

திரௌபதி அம்மன் கோவில்

இதையடுத்து, பூட்டி சீல் வைக்கப்பட்ட தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலை திறக்கக் கோரி மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலை திறந்து பொதுமக்களை அனுமதிக்காமல் ஒருகால பூஜை நடத்தவும், மீண்டும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் கோயிலை பூட்டி வைக்கலாம், . சீல் வைத்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தர்மராஜா திரௌபதி அம்மன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த சீலை வருவாய்த் துறை அதிகாரிகள் அகற்றி, கோவிலின் பிரதான நுழைவு வாயிலை போலீஸ் பாதுகாப்புடன் திறந்தனர்.

பின்னர் அர்ச்சகர் மற்றும் உதவியாளர் இருவரும் கோயிலுக்குள் சென்று தர்மராஜா திரௌபதி அம்மனுக்கு பூஜை செய்தனர். அப்போது கோயிலுக்குள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு கோவில் கதவுகள் மூடப்பட்டு பூட்டப்பட்டது. அதேபோல், தினமும் காலை 6 மணிக்கு கோயில் கதவு திறக்கப்பட்டு, ஒரு கால பூஜை மட்டும் செய்துவிட்டு மீண்டும் கோயில் மூடப்படும் என்றும், பொதுமக்கள் யாரும் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலால் மூடப்பட்ட கோவில் இன்று திறக்கப்பட்டுள்ளதால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க மேல்பாதி கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web