10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு.. புகார் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு

 
அன்பில் மகேஷ்

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், தேர்வுப் பணிகளைத் திட்டமிட்டபடி நடத்தவும், வினாத்தாள்கள் தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்கவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 8, 2026 அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கால அட்டவணையும் இதையொட்டி அறிவிக்கப்பட்டு, அதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தேர்வு

தேர்வு நடைபெறும் போது வினாத்தாளில் பிழைகள் இருந்தாலோ அல்லது ஏதேனும் கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டிருந்தாலோ, அது குறித்து உடனடியாகப் புகார் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. தொடர்பு கொள்ள வேண்டிய புகார் எண்கள்: 9498383075, 9498383076. மின்னஞ்சல்: dgequestionpaperqueries@gmail.com

இந்த உதவி எண்கள் மூலம் ஆசிரியர்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வினாத்தாள் தொடர்பான தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம். இதன் அடிப்படையில் மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்கள்  வழங்குவது குறித்து அதிகாரிகள் பரிசீலிப்பார்கள்.

தேர்வு

மாணவர்களுக்கான முக்கியக் குறிப்புகள்

தேர்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கும் என்பதால், மாணவர்கள் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையத்திற்குச் செல்வது அவசியமாகும்.

முறைகேடுகளைத் தடுக்க மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் எவ்வித அச்சமுமின்றித் தேர்வு எழுதத் தேவையான குடிநீர் மற்றும் மின்சார வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்வு அறையில் செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் அல்லது எந்தவிதமான எலக்ட்ரானிக் சாதனங்களுக்கும் அனுமதி கிடையாது.