10, +2 பொதுத்தேர்வுகள்.. சிபிஎஸ்இ-யின் புதிய முன்னேற்பாட்டுப் பணிகள் தொடக்கம்!

 
சிபிஎஸ்இ மாணவிகள்

அடுத்த கல்வியாண்டில் நடைபெறவுள்ள 10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகளுக்கான முன்கூட்டிய பணிகளை சிபிஎஸ்இ நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

தேர்வு முடிவுகள் மாணவிகள் ரிசல்ட் சிபிஎஸ்இ ஸ்கூல் படிப்பு

தேர்வர்களின் பெயர், ரோல் எண் மற்றும் பாடக் குறியீடு போன்ற முக்கிய விவரங்களைக் கொண்ட 'ஃப்ளையிங் ஸ்லிப்ஸ்' எனப்படும் ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட உள்ளன. ICR, OCR மற்றும் OMR போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மாணவர்களின் தரவுகள் முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளன. இம்முறை சுமார் 29.89 லட்சம் மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வுகளை எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிஎஸ்இ

தேர்வுப் பணிகளில் எவ்விதத் தடையோ அல்லது மனிதத் தவறுகளோ ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையிலும், நிர்வாகப் பணிகளை விரைவுபடுத்துவதற்காகவும் இந்த நவீன முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.