தேர்வுக்குப் படிக்கச் சொல்லி தந்தை கண்டிப்பு - 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை!

 
கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில், தந்தை படிக்கச் சொல்லி கண்டித்ததால் மனமுடைந்த 10-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உச்சப்பட்டி மறுவாழ்வு மையத்தில் வசித்து வரும் சிவநாதன் - மாரியம்மாள் தம்பதியினரின் மகன் கிஷோர் (15). இவர் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், தேர்வுகளுக்கு இடையே விடுமுறை இருந்தது.

பள்ளி மானவி தற்கொலை

குடும்பச் சூழ்நிலை காரணமாக கிஷோரின் தாய் மாரியம்மாள், ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். விடுமுறை நாட்களில் தனது தாயைப் பார்க்கச் சென்ற கிஷோர், நேற்று காலை மீண்டும் திருமங்கலத்திற்குத் திரும்பியுள்ளார்.

காலை வீட்டிற்கு வந்த கிஷோர், தேர்வுக்குப் படிக்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதாகத் தந்தை சிவநாதன் கண்டித்துள்ளார். மேலும், ஒழுங்காக அமர்ந்து படிக்குமாறு கூறிவிட்டு அவர் வேலைக்குச் சென்றுள்ளார். மாலை நேரத்தில் கிஷோரின் வீட்டின் கதவு நீண்ட நேரமாக உள்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கிஷோர் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக அவரை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

குளத்தில் மூழ்கி உயிரிழந்த பிள்ளைகள்! விரக்தியால் தற்கொலை செய்து கொண்ட தந்தை!

தகவல் அறிந்து வந்த ஆஸ்டின்பட்டி போலீசார், கிஷோரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மாணவனின் தற்கொலைக்குத் தந்தையின் கண்டிப்பு மட்டுமே காரணமா அல்லது வேறு ஏதேனும் குடும்பப் பிரச்சனைகள் உள்ளதா என்பது குறித்துப் பெற்றோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.