11-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்... பயத்தில் காதலன் செஞ்ச விபரீத வேலை!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு அருகே கள்ளிச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராபர்ட். இவரது மகன் தீனா (23). கட்டிட தொழிலாளியான இவர், 11-ம் வகுப்பு படித்து வரும் 16 வயதுடைய பள்ளி மாணவியை காதலித்து வந்ததாகவும், இருவரும் நெருங்கி பழகியதில் மாணவி 6 மாத கர்ப்பமானதாகவும் புகார்கள் எழுந்தது.
மாணவி கர்ப்பமானது அவரது பெற்றோருக்கு ஒரு கட்டத்தில் தெரிய வந்ததில், அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஊர் பெரியவர்களிடம் சென்று தனது மகள் கர்ப்பமானது குறித்து நியாயம் கேட்டு முறையிட்டுள்ளார்கள். அதன்பேரில் நேற்று காலை ஊர் பெரியவர்கள் தீனாவை அழைத்து விசாரித்துள்ளார்கள்.
இதனால் மாணவி கர்ப்பமானது குறித்து தன்மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்வார்களோ என்று அச்சம் அடைந்த தீனா, போலீசாரின் விசாரணைக்கு பயந்து தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலைச் செய்துக் கொண்டார்.
இதனை கண்ட அவரது குடும்பத்தினர் தீனாவை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக பரிசோதித்து விட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த பேரணாம்பட்டு போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் கட்டிட தொழிலாளி தீனாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இது சம்மந்தமாக வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா