11-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை.. முட்புதரிலிருந்து சடலமாக மீட்பு!

 
மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், உறவினர் வீட்டுக்குச் சென்ற 11-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு படுகொலை செய்யப்பட்டு முட்புதரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ராஞ்சி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று தனது உறவினர் வீட்டுக்குச் சென்ற அவர், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்காததால், ராஞ்சி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

பாலியல் பலாத்காரம் இளம்பெண்

இந்நிலையில், மாணவியின் வீட்டில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் முட்புதருக்குள் மாணவி சடலமாகக் கிடப்பதாகப் பொதுமக்களிடமிருந்து போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடற்கூராய்வு மற்றும் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், மாணவியின் உடலில் பலத்த கொடூரக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. மர்ம நபர்கள் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, பின்னர் கழுத்தை நெரித்துக் கொன்று உடலை முட்புதரில் வீசிவிட்டுத் தப்பியோடியிருப்பது தெரியவந்துள்ளது.

பாலியல் பலாத்காரம் வன்கொடுமை சிறுமி

சம்பவ இடத்திலிருந்து முக்கியத் தடயங்களைச் சேகரித்துள்ள போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தலைநகர் ராஞ்சியில் பள்ளி மாணவிக்கு இழைக்கப்பட்ட இந்தத் கோரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.