காதலிக்க மறுத்த 11-ம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞர் - சிதம்பரம் அருகே கொடூரம்!

 
மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தை வாலிபர் ஒருவர் கத்தியால் அறுத்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அருகே கீழ மூங்கிலடி கிராமத்த்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர், பாதிக்கப்பட்ட 11-ம் வகுப்பு மாணவியின் வீட்டிற்கு மின்சாரப் பணிக்காக வேலை செய்யச் சென்றுள்ளார். அப்போது மாணவியுடன் அறிமுகமான அவர், தொடர்ந்து மாணவியைத் தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தித் தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால், அந்த மாணவி ஐயப்பனின் கோரிக்கையை ஏற்க மறுத்துக் காதலிக்கத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மாணவியின் மறுப்பால் ஆத்திரமடைந்த ஐயப்பன், இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

காதலிக்க மறுத்த கோபத்தில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து எதிர்பாராதவிதமாக மாணவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயன்றுள்ளார். இந்தத் தாக்குதலில் கழுத்தில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு, அவசர சிகிச்சளுக்காகக் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடிய கொடூர இளைஞர் ஐயப்பனைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பள்ளி மாணவி மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.