ஆசிரியர் தாக்கியதில் 8-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு!

 
மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் தாக்கியதில் படுகாயமடைந்த எட்டாம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹர்தோய் மாவட்டம் பர்கானி வளர்ச்சி வட்டாரப் பள்ளியில் 8-ம் வகுப்புப் படித்து வந்த மாணவி ஷாமா, கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி தேர்வுக்காகப் பள்ளிக்குச் சென்றபோது தோழியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து வகுப்பு ஆசிரியரிடம் மாணவி புகார் அளித்தபோது, காரணங்களைக்கேட்காமல் ஆசிரியர் அவரைத் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

ஆசிரியர் பள்ளி சிறுமி மீது தாக்குதல் அடி ஸ்கேல்

ஆசிரியர் தாக்கியதில் பலத்த காயமடைந்த மாணவி பரூக்காபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், பள்ளித் தலைமை ஆசிரியர் அக்‌ஷய் சிங் யாதவ், வகுப்பு ஆசிரியர் ராஜேந்திர கங்வார் மற்றும் சக மாணவி ஆகிய மூன்று பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் இருவரும் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.