'கிளாட்' நுழைவுத் தேர்வு - ஆகஸ்ட் 3 முதல் விண்ணப்பப் பதிவு தொடக்கம்!

 
தேர்வு காவலர் கேட் ஜேஇஇ நீட் மாணவி மாணவர்கள்

நாடு முழுவதும் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை சட்டப் படிப்புகளில் சேருவதற்கான 'கிளாட் 2027'  நுழைவுத் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

தேசிய சட்டப் பல்கலைக்கழகக் கூட்டமைப்பின் செயற்குழு மற்றும் ஆளும் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3, 2026 முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 31, 2026 வரை விண்ணப்ப போர்ட்டல் திறந்திருக்கும்.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வுகள் தேர்வு

டிசம்பர் 6, 2026 (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை ஒரே ஷிஃப்ட்டாக ஆஃப்லைன் முறையில் நடைபெறும். தேர்வு பாடத்திட்டம் குறித்து மாணவர்களிடையே எழுந்த சந்தேகங்களுக்குத் தேசிய சட்டப் பல்கலைக்கழகக் கூட்டமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது:

2027-ஆம் ஆண்டுக்கான கிளாட் தேர்வின் பாடத்திட்டம், தேர்வு முறை  மற்றும் வினாப் பிரிவுகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. பழைய நடைமுறையே தொடரும். தகுதியான மாணவர்கள் consortiumofnlus.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆகஸ்ட் 3 முதல் தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.