ஊரக வளர்ச்சித் துறையில் எழுத்தர் பணி.. செப்.30 கடைசி தேதி!
பெரம்பலூர், சிவகங்கை, திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இப்பணி இடங்கள் எஸ்சி பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,900 முதல் ரூ.58,500 வரை வழங்கப்படும். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். தகுதியானவர்கள் நேரடி நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.

சம்மந்தப்பட்ட மாவட்டங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் உரிய சான்றிதழ் நகல்களை இணைத்து வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
