நெருங்கிய தோழிகள் பேருந்து மோதி பலி... ஒன்றாக வெளிநாட்டில் வேலைக்கு செல்ல இருந்த நிலையில் சோகம்!

 
தோழிகள் விபத்தில் பலி

கேரள மாநிலம் கோட்டயம் அருகே பாம்பாடியில் நடைபெற்ற பயங்கர சாலை விபத்தில், ஸ்கூட்டரில் சென்ற இரண்டு இளம்பெண்கள் தனியார் பேருந்து அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோட்டயம் அருகே உள்ள பாம்பாடியில் இன்று காலை 9 மணியளவில் கிருபா மெரின் குரியன் மற்றும் ஆஷ்லி ஆன் தாமஸ் ஆகிய இரண்டு நெருங்கிய தோழிகள் இருவரும் ஒரே ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்று கொண்டிருந்த போது, அவர்களுக்கு முன்னால் சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென பிரேக் போட்டுள்ளது.

இதனால் நிலைதடுமாறிய இவர்களது ஸ்கூட்டர் திடீரெனச் சறுக்கிச் சாலையில் விழுந்துள்ளது. அப்போது அதே திசையில் கோட்டயத்தை நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியதுடன், பேருந்தின் அடியிலும் சிக்கிக் கொண்டது.

மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த கிருபா மெரின் குரியன் மற்றும் ஆஷ்லி ஆன் தாமஸ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வெளிநாடு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அதற்கான திட்டமிடலில் இருந்த இந்த இளம் தோழிகள் இருவரும் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.