சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வடபட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலையில் எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது.

இக்கோர விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்த முதலமைச்சர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.
விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி உடனடியாக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உரிய உயர்தரச் சிகிச்சை அளிக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு முன்னின்று வழங்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
