அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது" - முதல்வர் ஸ்டாலின் பேட்டி!
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும். ஆனால் ஏமாற்றம் இருக்காது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார். இன்று காலை முதல்வரின் சொந்த தொகுதியான கொளத்தூரில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
#WATCH | "ஏமாற்றம் இருக்காது.. மாற்றம் இருக்கும்!"
— Sun News (@sunnewstamil) September 24, 2024
அமைச்சரவை மாற்றம் மற்றும் அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி தருவது தொடர்பான கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'நச்' பதில்#SunNews | #DMK | #MKStalinGovt | @mkstalin | @Udhaystalin pic.twitter.com/Z1aeOa03Dq
ஜி.கே.எம் காலணி ஜம்புலிங்கம் பிரதான சாலையில் தற்போது புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து கொளத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு தொடக்கப் பள்ளியைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் மாணவர்களுக்கு புத்தக பை, நோட்டு, எழுதுபொருட்கள், வாட்டர் பாட்டில் அடங்கிய பரிசுப் பொருட்களை வழங்கிய முதல்வர் ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.
“எப்போதும் கொளத்தூர் தொகுதிக்கே வருகிறீர்களே? என்ற கேள்விக்கு, “இது எப்போதும் என் சொந்த தொகுதி. நம்ம வீட்டு பிள்ளை போல பார்ப்பார்கள். அதனால் எப்போது வருவேன்” என்றார்.
அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா? உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி தருவது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “அமைச்சரவையில் மாற்றம் இருக்கும். ஏமாற்றம் இருக்காது” என்று தெரிவித்தார்.
இம்மாதம் 28ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள திமுக முப்பெரும் நிறைவு விழாவில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!