ஜனவரி 21,22 தேதிகளில் முதல்வர் சிவகங்கை மாவட்டத்தில் நேரில் களஆய்வு !

தமிழகத்தில் மாவட்ட வாரியாக முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ஜனவரி 21,22 தேதிகளில் சிவகங்கை மாவட்டத்தில் களஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசின் நலத்திட்டங்களை மக்களை சென்றடைகிறதா என முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் கள ஆய்வு செய்து அரசு விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். ஜனவரி 21ம் தேதி காரைக்குடி அழகப்பா பல்கலையில் நூலகத்தை திறந்து வைக்கிறார். அன்று இரவு காரைக்குடியில் தங்கி ஓய்வெடுக்கும் முதல்வர் மறுநாள் ஜனவரி 22ம் தேதி காலை சிவகங்கை வருகிறார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் துறை ரீதியான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதனைத் தொடர்ந்து சிவகங்கை அரசு கலைக்கல்லூரியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!