வேலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய் அறிவிப்பு!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் விஜய் நிதியுதவி அறிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று நிகழ்ந்த வெடிவிபத்தில், கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த காயத்ரி (40) என்பவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தில் காயமடைந்து வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சங்கீதா (35) என்பவருக்குச் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த காயத்ரியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர், அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சமும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 லட்சமும் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
