திமுகவின் 3 முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய முதல்வர் விஜய் அநடவடிக்கை!

 
விஜய் கேஷுவல்

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் புகார்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணையைத் தீவிரப்படுத்தி, முன்னாள் அமைச்சர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த தேவையான அனுமதியை வழங்குமாறு, தமிழக அரசு தரப்பில் ஆளுநரிடம் முறைப்படி கோரப்பட்டுள்ளது. பல்வேறு அரசுத் துறைகளில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் டெண்டர் தொடர்பான ஆவணங்கள் தீவிரமாக மறுஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

விஜய் மகிழ்ச்சி

தமிழகச் சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய், கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களுக்கான வலுவான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும், தேவையான நேரத்தில் அவற்றை வெளியிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை ஏற்கனவே பல இடங்களில் சோதனைகளை வழக்கு பதிவிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளையும் அரசியல் நடவடிக்கைகளையும் எதிர்கொள்ளத் தயார் என்றும், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என திமுக தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.