டெங்கு தடுப்பு நடவடிக்கை - அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு!
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்கும் வகையில், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் தற்போதைய நிலவரம் குறித்தும், பரவல் குறித்த விவரங்களையும் அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை விரைந்து கண்டறிந்து, கொசுப்புழு ஒழிப்பு மற்றும் கொசுக்களை அழிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டுப் பகுதிகளில் தூய்மைப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, டெங்கு காய்ச்சல் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்திட வேண்டும் என அதிகாரிகளுக்குக் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
