முதல்வர் விஜய் மெட்ரோ ரயிலில் பயணம் - பணிகளை நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை!
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக ஓமந்தூரார் அரசினர் தோட்டம் நிலையத்திலிருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்தார்.
ஓமந்தூரார் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்து ரயிலில் ஏறிய முதலமைச்சர் விஜய், நந்தனம் வரை பயணம் மேற்கொண்டு செயல்பாடுகளை ஆய்வு செய்தார். ரயிலில் ஏறிய முதலமைச்சருக்கு மெட்ரோ அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தைச் சென்றடைந்த போது, அங்கே திரண்டிருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நந்தனம் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்தில், மெட்ரோ அமைப்பின் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

சென்னை நகரில் நடைபெற்று வரும் இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்துக் கேட்டறிந்த அவர், போரூர் - பூந்தமல்லி வழித்தடம் மற்றும் கத்திப்பாரா பகுதிகளில் நடைபெறும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
