லண்டனில் உயரமான ஓட்டலில் தங்கியிருக்கும் CM விஜய்.. வாடகை எவ்வளவு தெரியுமா?!
Sep 11, 2026, 21:10 IST
தமிழகத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் லண்டன் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் விஜய், அங்குள்ள புகழ்பெற்ற 'தி ஷார்ட்' கட்டடத்தில் அமைந்துள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளார்.
ஐரோப்பாவின் மிக உயரமான கட்டடங்களில் ஒன்றாக விளங்கும் 'தி ஷார்ட்' வளாகத்தில் அமைந்துள்ள இந்த நட்சத்திர விடுதி, 34 தளங்களைக் கொண்டு தனித்துவமாக இயங்கி வருகிறது. இங்கிலாந்து தலைநகரான லண்டன் நகரின் முழு அழகையும் உயரத்திலிருந்து ரசிக்கும் வகையில் இந்த விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் கூடிய இந்தச் சொகுசு விடுதியில், ஒரு நாள் அறை வாடகை தோராயமாக ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1.60 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. தங்கும் அறையின் வகையைப் பொறுத்து இந்தக் கட்டணம் மாறுபடுகிறது.
