பள்ளி குழந்தைகளுக்கு கேக்.. கொளத்தூரில் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய்!

 
கேக்

 

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று (நவம்பர் 13) தொடங்கி வைத்தார்.சென்னை கொளத்தூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு கேக் மற்றும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளை வழங்கி இத்திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

பள்ளி மாணவர்களுக்கு கேக்: குழந்தைகள் தின ஸ்பெஷல்- ரூ.9.27 கோடியில் தமிழக அரசு புதிய அறிவிப்பு - cm vijay tvk government to distribute cakes to school students on childrens day ...

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 61 லட்சத்து 84 ஆயிரத்து 566 மாணவர்களுக்கு கேக் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கேக்குகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாணவருக்கும் மொத்தம் 45 கிராம் எடையுள்ள கேக் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12 மாவட்டங்களில் தலா 2 பாக்கெட்டுகளும், மற்ற மாவட்டங்களில் ஒரு பாக்கெட்டும் வழங்கப்படுகின்றன.மேலும், அனைத்து மாணவர்களுக்கும் முதலமைச்சரின் வாழ்த்துகள் அடங்கிய குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளும் வழங்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் இந்த விநியோகப் பணிகள் நடைபெற்று வருகின்றன.