தனி விமானத்தில் டெல்லி புறப்பட்ட முதல்வர் விஜய்... சோனியா காந்தி விழாவில் பங்கேற்பு!

 
சோனியா

 

தமிழக முதல்வர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக அவர் டெல்லி சென்றுள்ளார்.சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்ட முதல்வர் விஜய், விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள 'Belonging: A Journey of Love' என்ற நூலின் வெளியீட்டு விழா இன்று மாலை டெல்லியில் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

CM Vijay to Attend Sonia Gandhi's Memoir Launch Amid Mekedatu Dam Pressure

இந்த விழாவில் பங்கேற்றுவிட்டு, இன்று இரவே முதல்வர் விஜய் சென்னை திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, கர்நாடக அரசு முன்மொழிந்துள்ள மேகதாது அணை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மேலிடத் தலைவர்களிடம் விஜய் பேச வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், விஜயின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது.