மருத்துவமனையில் ஆளுநரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் விஜய்!

 
அர்லேகர்

 

தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை முதல்வர் விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

விஜய் ஆளுநர் அர்லேகர்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஆளுநர் அர்லேகர் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற உள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனையில் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.

அர்லேகர் ஆளுநர் கவர்னர்விஜய் விஜய்கவர்னர்

முதற்கட்ட தகவல்களின்படி, சளித் தொந்தரவு காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஆளுநருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.இந்த நிலையில், மருத்துவமனைக்குச் சென்ற முதல்வர் விஜய், ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.