பயிர்ச்சேதங்களை கணக்கெடுங்க... கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு!
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பயிர்ச்சேதங்களை உரிய முறையில் கணக்கெடுக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். பருவமழை சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட நிலையில், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மழைப்பொழிவு குறைவாகப் பதிவான மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளவும் அவர் ஆணையிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் உண்மை நிலவரத்தை நேரில் ஆராய்ந்து, தேவையான நிவாரண மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மழை பாதிப்புகள், பயிர்ச்சேதங்கள் மற்றும் விவசாயிகளின் தேவைகளை மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளுக்குத் தகுந்த உதவிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
