40கிமீ காரின் மேற்கூரையில் ஏறி குட்கா கடத்தல்காரர்களை பிடித்த காவலர்!முதல்வர் விஜய் நேரில் பாராட்டு!

 
விஜய்

 

கோவை மாவட்டத்தில் குட்கா கடத்தல் காரை பிடிக்க உயிரை பணயம் வைத்து செயல்பட்ட தலைமை காவலர் வேல்முருகனை முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார்.

போலீஸ்

கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான கார் ஒன்று நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கோவில்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் வேல்முருகன் அந்த காரின் மேற்கூரையில் ஏறியுள்ளார்.

காரின் மேற்கூரையில் காவலர் இருப்பது தெரிந்தும், கடத்தல் கும்பல் காரை நிறுத்தாமல் விளாங்குறிச்சியில் இருந்து அவிநாசி நோக்கி சுமார் 40 கிலோமீட்டர் தூரம் வரை ஓட்டிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் அந்த காரை மடக்கிப் பிடித்தனர்.பின்னர் காரை சோதனை செய்தபோது, சுமார் 233 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காரில் இருந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாடு வெளிநாட்டில் மகிழ்ச்சி விஜய்

இந்த நடவடிக்கையின்போது உயிரை பணயம் வைத்து செயல்பட்ட கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் ம. வேல்முருகனை முதல்வர் விஜய் இன்று தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்துப் பாராட்டினார். அவருக்கு பரிசும் வழங்கப்பட்டது.

அப்போது காவலர் வேல்முருகனிடம், பணியின்போது கவனமாகவும் பாதுகாப்பாகவும் செயல்பட வேண்டும் என்று முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.குட்கா கடத்தலை தடுக்க மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையின்போது காவலர் வேல்முருகன் மேற்கொண்ட இந்த நடவடிக்கை தற்போது கவனம் பெற்றுள்ளது.