நாளை திருச்சி செல்லும் முதல்வர் விஜய்! 16 கி.மீ. ரோடு ஷோ; ரூ.134 கோடி மருத்துவமனை திறப்பு

 
விஜய்

 

தமிழக முதலமைச்சர் விஜய் நாளை (நவ.20) தனி விமானம் மூலம் திருச்சி செல்கிறார். அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், சுமார் 16 கி.மீ. தூரம் ரோடு ஷோ நடத்தி பொதுமக்களைச் சந்திக்கிறார்.

ரோடு ஷோ, ரூ.134 கோடி மதிப்பிலான மருத்துவமனை திறப்பு' - முதல்வர் விஜய்யின் திருச்சி விசிட் அஜெண்டா | chief minister joseph vijay trichy visit update - Vikatan

சென்னையில் இருந்து காலை 10 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் செல்லும் முதலமைச்சர், அங்கிருந்து புத்தூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்குச் செல்கிறார்.அங்கு ரூ.134.59 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள, 6 தளங்கள் மற்றும் 600 படுக்கை வசதிகளைக் கொண்ட புதிய மருத்துவக் கட்டிடத்தைத் திறந்து வைக்கிறார்.

நவ.20ல் திருச்சியில் முதல்வர் விஜய் – மருத்துவமனை திறப்பு, ரோடு ஷோ!

தொடர்ந்து, திருச்சியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் அவர், சுமார் ரூ.200 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார். மேலும், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்க உள்ளார்.