நாளை வண்டலூர் செல்கிறார் முதல்வர் விஜய் - காவலர் பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்பு!

 
விஜய்

சென்னை அருகே வண்டலூர் பகுதியில் முதல்வர் விஜய் நாளை முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் தமிழ்நாடு காவல் அகாடமி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர்கள் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நாளை நடைபெற உள்ளது.

முதல்வர் முதலமைச்சர் விஜய்

14-வது பயிற்சி பிரிவு டிஎஸ்பி அதிகாரிகளுக்கான இந்த அணிவகுப்பு மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் முதல்வர் விஜய் பங்கேற்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள உள்ளார்.

மேலும் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை முதல்வர் விஜய் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை மற்றும் அரசின் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் பிரச்சாரம் தேர்தல் இடைத்தேர்தல்

முதல்வர் வருகையையொட்டி வண்டலூர், ஊனமாஞ்சேரி மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.முதல்வர் விஜய் சமீபத்தில் பல்வேறு அரசு மற்றும் தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நிலையில், வண்டலூரில் நடைபெறும் காவல்துறை பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்க உள்ளதும் கவனம் பெற்றுள்ளது.