PM மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து!
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, தமிழக முதலமைச்சர் விஜய் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தனது வாழ்த்துச் செய்தியில், வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் பிரதமர் மோடி, சிறந்த உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் தமிழக முதலமைச்சர் விஜய்யும் பிரதமர் மோடிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.விஜய்யின் வாழ்த்துச் செய்தியில், வலிமையான இந்தியாவை உருவாக்கும் உன்னத நோக்கில் பிரதமர் மோடி அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர் நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என விஜய் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
