அதிகாரத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் இருந்தா இப்பவே விலகிடுங்க... முதல்வர் விஜய் எச்சரிக்கை!

 
விஜய் விஜய்

 

தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்ற விஜய், மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் தான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவன் என்றும், மக்களின் பிள்ளையாகவே இங்கு நிற்பதாகவும் உணர்ச்சிவசப்பட்டார். மக்களின் அன்பினாலேயே இன்று 'சி.ஜோசப் விஜய் எனும் நான்' என்று கூறி பதவியேற்கும் நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார். தமிழகத்தின் நிதிநிலை மோசமாக உள்ளதால், 10 லட்சம் கோடி கடன் சுமை இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இது குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என உறுதி அளித்தார்.

vijay

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு ஆகியவற்றுக்குத் தனது அரசு முதலிடம் கொடுக்கும் என்று முதல்வர் விஜய் பேசினார். 8 கோடி மக்களும் தனது மக்களே என்று குறிப்பிட்ட அவர், ரேஷன், மருத்துவம் மற்றும் குடிநீர் வசதிகளில் முழு கவனம் செலுத்தப்போவதாகக் கூறினார். மக்கள் பணத்தில் ஒரு பைசாவைக் கூடத் தொட மாட்டேன் என்றும், தவறு செய்பவர்களைத் தனது அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் மக்களிடையே உறுதியளித்தார்.

vijay

தன்னுடன் இருப்பவர்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த நினைத்தால் இப்போதே விலகிவிடலாம் என எச்சரித்த அவர், மக்கள் நலனே அரசின் ஒரே குறிக்கோள் என்றார். விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறுபான்மையினருக்குத் தனது அரசு எப்போதும் அரணாக இருக்கும் எனத் தெரிவித்தார். தனக்கு ஆதரவு அளித்த கூட்டணிக் கட்சியினருக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவித்து, இது ஒரு புதிய தொடக்கம் என தனது உரையை அவர் நிறைவு செய்தார்.