“அப்பா LEGACY-ய காப்பாத்தனும்” - CM விஜய் மகன் ஜேசன் சஞ்சய் உருக்கம்!

 
ஜேசன் சஞ்சய்

திரைப்பட இயக்குநரான ஜேசன் சஞ்சய் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், தங்களது குடும்பத்தின் பெருமையையும் பாரம்பரியத்தையும் தக்கவைப்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

சஞ்சய்

தனது குடும்பத்தின் பின்னணி மற்றும் அது அளிக்கும் பொறுப்புகள் குறித்துப் பேசிய ஜேசன் சஞ்சய், "எனக்கும் சரி, என் தங்கச்சிக்கும் சரி, இல்ல எங்க குடும்பத்தைச் சேர்ந்த யாராக இருந்தாலும் சரி... இது ஒரு எக்ஸ்ட்ரா லெவல் பொறுப்பு. அப்பாவோட லெகசியை (பாரம்பரியத்தை) நாங்க தக்க வச்சு, அதை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு போய் கேரி ஃபார்வேர்ட் செய்து பாதுகாத்துக்கணும் அப்படிங்கறதுல ரொம்பவே கவனமாகவும் விழிப்புணர்வுடனும் இருக்கோம்" எனத் தெரிவித்துள்ளார்.

சஞ்சய்

முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், லைகா புரோடக்ஷன்ஸ்  தயாரிப்பில் இயக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.